நீரிழிவு நரம்பு வலியை இயற்கையாகவே எப்படி சரிசெய்யலாம்?

By Gowthami Subramani
07 Oct 2024, 08:00 IST

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் நரம்பு வலியை அனுபவிக்கின்றனர். இது வலியை உணரும் திறனைக் குறைக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கால்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாகும்

கால்களை உயர்த்துவது

தலையணைகள் மூலம் கால்களை உயர்த்துவது, முதுகு நரம்புகளில் அழுத்தத்தை குறைத்து, நரம்பு வலியைக் குறைக்க உதவுகிறது

வெதுவெதுப்பான நீர்

வெதுவெதுப்பான நீரில் குளியல் சுழற்சியை மேம்படுத்தி, அசௌகரியத்தை எளிதாக்குகிறது. இதன் மூலம் நரம்பு வலியைக் குறைக்கலாம்

வாழ்க்கை முறை மாற்றங்கள்

நீரிழிவு நரம்பு வலி அறிகுறிகளை எளிதாக்க மற்றும் நரம்பு அழுத்தத்தை குறைக்க நீச்சல் அல்லது நடைபயிற்சி போன்ற குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சிகளைச் சேர்க்க வேண்டும்

வைட்டமின் பி உட்கொள்ளலை அதிகரிப்பது

நரம்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், நரம்பு வலியின் அறிகுறிகளை எளிதாக்கவும் வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். வைட்டமின் பி சப்ளிமெண்ட்ஸ் மூலம் உட்கொள்ளலை அதிகரிக்கலாம்

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர் செய்வது உடலில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளைத் தூண்டுகிறது. இது எண்டோர்பின் போன்ற இயற்கையான வலி-நிவாரணி இரசாயனங்களை வெளியிடுகிறது

ஐஸ் மற்றும் வெப்ப தெரபி

வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஹீட் பேக் மற்றும் ஐஸ் தெரபி செய்யலாம். ஒரு நாளைக்கு 3 முறை செய்வதன் மூலம் நரம்பு வலியைக் குணமாக்கலாம்