சர்க்கரை நோயால் சிலருக்கு தலைசுற்றல் வரும். மேலும் கால்களில் வீக்கம் அதிகரித்து நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அதேசமயம், பலமுறை மக்கள் மயங்கி விழுகின்றனர்.
இரத்த சர்க்கரை அளவு ஏற்கனவே குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளவர்களுக்கு தலைச்சுற்றல் பிரச்சனை இருக்கலாம்.
இரத்த சர்க்கரை அளவு 70 mg/dL க்கு கீழே குறையும் போது மயக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடலில் குளுக்கோஸ் அளவு குறைவதால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
மூளை தனது வேலையைச் செய்ய போதுமான ஆற்றல் பெறாத போது இரத்த சர்க்கரை குறைவு ஏற்பட்டு தலைச்சுற்றல் அதிகரிக்கலாம்.
அதேபோல் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், தலைச்சுற்றல் பிரச்சனை ஏற்படலாம். பார்வையில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகரித்த பசி, தலைவலி, வயிற்று வலி போன்றவை ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகள் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.