இரவில் பல்வேறு காரணங்களால் இரத்த சர்க்கரை அதிகரிப்பு ஏற்படலாம். இதைத் தவிர்க்க சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் கையாள்வது அவசியமாகும். இதில் இரவில் இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்க உதவும் சில குறிப்புகளைக் காணலாம்
ஆரோக்கியமான உணவு
படுக்கைக்கு முன்னதாக புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட ஒரு சிறிய சிற்றுண்டியை எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரையின் மாற்றத்தைத் தடுக்க உதவுகிறது
நிறைய தண்ணீர் குடிப்பது
தூங்கும் முன்பாக போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். எனினும், அதிகளவு தண்ணீர் அருந்துவது தூக்கத்தை விழிக்க செய்யலாம். எனவே, குறைவான அளவில் அருந்த வேண்டும்
கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்ப்பது
உறங்கும் முன்னதாக சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள் அல்லது பெரிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குவதுடன், தூக்கத்தின் தரத்தை சீர்குலைக்கலாம்
வழக்கமான உடற்பயிற்சி
வழக்கமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது
போதுமான தூக்கத்தைப் பெறுவது
ஒரு நல்ல இரவு தூக்கத்தைக் கையாள்வதன் மூலம், காலையில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பைத் தடுக்க முடியும்
வாய்வழி சுகாதாரத்தை பராமரித்தல்
ஈறு நோய் தூங்கும் போது இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. வாய்வழி சுகாதாரத்தை மேற்கொள்வதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கலாம்
மன அழுத்தத்தை நிர்வகிப்பது
அதிகப்படியான மன அழுத்தம் இரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்கிறது. எனவே மன அழுத்தத்தை நிர்வகிப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை சீராக்கலாம்