நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சனையைக் குறிக்கிறது. இந்த ப்ரீ டயாபடீஸைக் கட்டுப்படுத்த பிஸ்தாக்கள் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் ப்ரீ டயாபடீஸூற்கு பிஸ்தாக்கள் தரும் நன்மைகளைக் காணலாம்
ப்ரீ டயாபடீஸ்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகமாக இருந்தாலும், சர்க்கரை நோய் என்று கண்டறியும் அளவுக்கு அதிகமாக இல்லாத நிலையை நீரிழிவு முந்தைய நிலை அல்லது ப்ரீ டயாபடீஸ் என்றழைக்கப்படுகிறது. இது நிர்வகிக்கப்படாவிட்டால் வகை 2 நீரிழிவு நோய் ஏற்பட வழிவகுக்கும்
நீரிழிவு கட்டுப்பாட்டில் பிஸ்தா
ஆராய்ச்சியில் பிஸ்தாக்களை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. இதன் அதிகளவிலான நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை இரத்த குளுக்கோஸ் மேலாண்மைக்கு உதவுகிறது
எடை அதிகரிப்பு இல்லாத
காலை மற்றும் இரவு உணவிற்கு முன்னதாக போதுமான அளவு பிஸ்தாவை உட்கொள்வது எடை அதிகரிப்பை ஏற்படுத்தாது. எனவே ப்ரீ டயாபடீஸை நிர்வகிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது
மற்ற ஆரோக்கிய நன்மைகள்
பிஸ்தாக்கள் இரத்த சர்க்கரை நிலைப்படுத்துவது மட்டுமல்லாமல், இதில் உள்ள புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுவதுடன், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது
குறிப்பு
பிஸ்தாக்கள் முன் நீரிழிவு நோய்க்கு ஒரு சிகிச்சையாக இல்லாவிட்டாலும், இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மதிப்புமிக்க ஒரு பகுதியாக அமைகிறது. இதை சமச்சீர் உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கலாம்