காலை உணவுக்குப் பிறகு எகிறும் சர்க்கரை அளவை குறைக்க இதை ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
08 May 2024, 09:00 IST

காலை உணவுக்குப் பிறகு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். இதில் உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க சில வழிகளைக் காணலாம்

குறைந்த கிளைசெமிக் குறியீடு

உயர்ந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக உயர்த்துகிறது. இதைத் தவிர்க்க, குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

சரியான உணவு விருப்பங்கள்

கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இரத்த ஓட்டத்தில் அதிகப்படியான சர்க்கரையை வெளியிடுகிறது. மாற்றாக, கார்போஹைட்ரேட்டுகளுடன் புரதங்கள், கொழுப்புகள் சேர்ப்பது இரத்த சர்க்கரையை சீராக வைக்க உதவுகிறது

உண்ணும் அளவு

உணவின் அளவு இரத்த சர்க்கரையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே உணவை இரண்டாகப் பிரித்து பகுதி அளவாகக் குறைக்கலாம்

சாப்பிட்ட பிறகு பயிற்சி

சாப்பிட்ட பிறகு சுறுசுறுப்பாக செய்வது அல்லது உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது

சரியான இன்சுலினைத் தேர்ந்தெடுத்தல்

டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காஸ்ட்ரோபரேசிஸ் உள்ளது. இது வீக்கம், மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே காஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்கள் சாப்பிடும் முன் போலஸ் கொடுப்பது நல்லது

உணவை எடுத்துக் கொண்ட பிறகு இந்த வழிகளை பின்பற்றுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்