வின்டரில் சர்க்கரை சமநிலையில் இருக்க நீங்க செய்ய வேண்டியவை

By Gowthami Subramani
30 Jan 2025, 16:28 IST

குளிர்காலத்தில் உணவுமுறை மாற்றங்கள், குறைவான உடல் செயல்பாடு காரணமாக வகை-2 நீரிழிவு நோயை நிர்வகிப்பது சவாலானதாக அமைகிறது. எனினும், ஆரோக்கியமான தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குளிர் மாதங்களில் நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது

பருவகால காய்கறி சாப்பிடுவது

கீரை, வெந்தயம் மற்றும் ப்ரோக்கோலி போன்ற குளிர்காலத்திற்கு ஏற்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இவை இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது

வீட்டிற்குள் சுறுசுறுப்பாக இருப்பது

குளிர்ந்த வானிலை காரணமாக வெளிப்புற உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகலாம். ஆனால் சுறுசுறுப்பாக இருக்க உட்புற உடற்பயிற்சியைக் கையாளலாம். அதன் படி யோகா, லேசான ஏரோபிக்ஸ் மற்றும் உட்புற பயிற்சி செய்வது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது

இரத்த சர்க்கரையை கண்காணிப்பது

குளிர்ந்த காலநிலை இன்சுலின் உணர்திறனை பாதிக்கலாம். எனவே சர்க்கரை ஏற்ற இறக்கங்களை அடையாளம் காணவும், அதற்கேற்ப இரத்த சர்க்கரை அளவை சரிசெய்யவும் அதை அடிக்கடி சரிபார்ப்பது அவசியமாகும்

நீரேற்றமாக இருப்பது

குளிர்காலத்தில் பெரும்பாலும் தண்ணீர் குடிப்பதை மறந்து விடுகின்றனர். ஆனால் நீரேற்றமாக இருப்பது நீரிழிவு மேலாண்மைக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது

நல்ல தூக்கம்

குளிர்ந்த காலத்தில் தூக்கம் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. எனவே தியானம் போன்ற மன அழுத்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம். இது இரத்த சர்க்கரை அளவை நேர்மறையாக பாதிக்கிறது