சர்க்கரை நோயாளிகளே! கோதுமை மாவு மட்டுமல்ல இந்த மாவையும் சேர்த்துக்கலாம்

By Gowthami Subramani
02 Apr 2025, 16:59 IST

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் கோதுமை ரொட்டி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இவை உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எனினும், நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை மாவு தவிர, இன்னும் சில மாவு வகைகளும் உதவுகிறது. இதில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய மாவு வகைகளைக் காணலாம்

அமராந்த் மாவு

அமராந்த் மாவு என்பது, அமராந்தஸ் எனப்படும் கீரையின் விதைகளை அரைத்து மாவாகப் பெறும் ஒரு வகை மாவு ஆகும். இது ராஜ்கிரா மாவு என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள மாங்கனீசு, குளுக்கோனோஜெனீசிஸ் செயல்முறை மூலம் சர்க்கரை அளவை சீராக வைக்கிறது

ராகி மாவு​

இது நார்ச்சத்துக்கள், பாலிபினால்கள், அமினோ அமிலங்கள் நிறைந்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகும். இந்த தானியம் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, பசியைக் குறைக்கிறது. மேலும், இது இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கிறது

பார்லி மாவு

பார்லி மாவு கரையக்கூடிய நார்ச்சத்து பீட்டா-குளுக்கன் உட்பட, நார்ச்சத்தின் நல்ல மூலமாகும். இது செரிமானப் பாதையில் சர்க்கரையுடன் பிணைப்பதன் மூலம் அதன் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது

கொண்டைக்கடலை மாவு

இது மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான மாவு மாற்றீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள அதிகளவு புரதம் இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது நீரிழிவு மேலாண்மைக்கு மிகவும் பங்களிக்கும்

பாதாம் மாவு

இது நன்றாக அரைத்த பாதாமிலிருந்து தயாரிக்கப்படும் மாவு ஆகும். இது வழக்கமான மாவுக்கு மாற்றாக பசையம் இல்லாதது மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் கொண்டதாகும். இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது