சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள் இது தான்.!

By Gowthami Subramani
04 Jan 2024, 12:51 IST

சர்க்கரை நோயாளிகள் உணவு முறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்

கோதுமை ரவை

நீரிழிவு நோயாளிகள் சாதாரண வெள்ளை ரவைக்குப் பதில் கோதுமை ரவையை எடுத்துக் கொள்ளலாம். இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போன்றவற்றைச் சேர்த்து கிச்சடியாக சாப்பிடலாம்

பாலக் ரொட்டி

காலை நேரத்தில் பாலக் கீரையில் தயாரிக்கப்படும் பாலக் ரொட்டியை எடுத்துக் கொள்ளலாம். மேலும், ஸ்மூத்தி போன்ற மற்ற வகையிலும் பாலக் கீரையை சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்

மசாலா ஓட்ஸ்

நீரிழிவு நோயளிகள் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போன்றவற்றைச் சேர்த்து மசாலா ஓட்ஸாக செய்து சாப்பிடலாம். இது சர்க்கரையை உயர்த்தாமல் பாதுகாக்க உதவும்

கொண்டைக்கடலை சாலட்

நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த காலை உணவாகக் கருதப்படுகிறது. காலையில் பயறு வகைகள், சுண்டல் வகைகளை எடுப்பது நல்லது. அதன்படி, கொண்டைக் கடலையை சாலட்டாக செய்து சாப்பிடலாம்

வெந்தயக் கீரை ரொட்டி

வெந்தயக் கீரையில் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், இவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. வெந்தயக் கீரையில் தயாரிக்கப்படும் உணவுகளை காலை நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்

பாசிப்பருப்பு அடை

இது புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச் சத்துக்களின் மூலமாகும். பாசிப்பருப்பில் தயாரிக்கப்படும் உணவுகளை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். பாசிப்பருப்பு அடையை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்

இட்லி, தோசை, சாம்பார்

காலை நேரத்தில் இட்லி, தோசை என்றால், 2 இட்லி அல்லது 2 தோசை மட்டும் எடுத்துக் கொண்டு பருப்பு, காய்கறிகள் நிறைந்த சாம்பாரை எடுத்துக் கொள்ளலாம்