குறைந்த இரத்த சர்க்கரை
உடலில் சர்க்கரை குறையும் போது நடுக்கம், வியர்வை அல்லது தலைச்சுற்றல் போன்ற பல்வேறு அறிகுறிகளைச் சந்திக்கலாம். இது குறைந்த இரத்த சர்க்கரைக்கான அறிகுறியாக இருக்கலாம்
15கி கார்போஹைட்ரேட்
சர்க்கரை குறையும் போது 15 கிராம் வேகமாக செயல்படும் கார்போஹைட்ரேட் விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டும். 1 தேக்கரண்டி சர்க்கரை, தேன் அல்லது சிரப், அரை கப் சாறு, வழக்கமான குளிர்பானம், மென்மையான இனிப்புகள் அல்லது குளுக்கோஸ் மாத்திரைகள் போன்றவை அடங்கும்
15 நிமிடங்களுக்குப் பிறகு
15கி கார்போஹைட்ரேட் உட்கொள்ளலுக்குப் பிறகு 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் இரத்த சர்க்கரையை சரிபார்க்க வேண்டும்
மீண்டும் இரத்த சர்க்கரை குறைந்தால்
இரத்த சர்க்கரை மீண்டும் குறைவாக இருந்தால் மற்றொரு 15 கிராம் கார்போஹைட்ரேட் சாப்பிடலாம்
தவிர்க்க வேண்டியவை
சாக்லேட், நட்ஸ், பீனட் பட்டர் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கொழுப்பு கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது
மருத்துவ உதவி
கார்போஹைட்ரேட்டுகள் உட்கொள்ளலுக்குப் பிறகும் குறைந்த இரத்த சர்க்கரை சரியாகாமல், அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது