இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்த ஆரோக்கியமான பானங்களை அருந்தலாம். இதில் உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்.
இலவங்கப்பட்டை தேநீர்
இலவங்கப்பட்டை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட நன்கு அறியப்பட்ட மசாலா வகையாகும். அதில் ஒன்று இரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை கொண்டதாகும்.
அஸ்வகந்தா தேநீர்
அளவுக்கு அதிகமான மன அழுத்தமும் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம். இதற்கு சிறந்த தீர்வாக அஸ்வகந்தா அமைகிறது. அஸ்வகந்தா ஒரு அடாப்டோஜெனிக் மூலிகையாகும்.
பாகற்காய் சாறு
இரத்த சர்க்கரையை நிர்வகிக்க ஒரு சிறந்த ஆயுர்வேத தீர்வாக பாகற்காய் சாறு அமைகிறது. இதில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலினைப் போலவே செயல்படக்கூடிய சேர்மங்களிலிருந்து வருகிறது. இவை குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வெந்தய நீர்
வெந்தய விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள விதைகள் ஆகும். இது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. வெந்தய விதைகள் ஊறவைத்த நீரை அருந்துவது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.
மஞ்சள் டீ
இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். இவை உடலில் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாக நிர்வகிக்க உதவுகிறது. மஞ்சளில் நிறைந்த குர்குமின் கலவை இரத்த சர்க்கரையைக் குறைப்பதுடன், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
நெல்லிக்காய் சாறு
ஆம்லா எனப்படும் இந்திய நெல்லிக்காய், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகும். காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறுடன் தொடங்குவது கணைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. மேலும், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
வேப்பிலை சாறு
வேப்ப இலைகளின் மருத்துவ குணங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வேம்பு நீர் அருந்துவது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதுடன், உடலில் நோயெதிர்ப்புச் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.