மட்டன் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும் என்றாலும் சில நேரங்களில் அதை உட்கொள்வது உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.
மட்டன் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதோடு இதயம் தொடர்பான நோய்களும் அதிகரிக்கும்.
கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், மட்டன் சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ஒவ்வொரு வாரமும் அதிக மட்டன் உண்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 62% அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் மட்டனை நட்ஸ்கள் அல்லது பருப்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடுவது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை 30% குறைக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும், உடல் பருமனையும் ஏற்படுத்தும் அபாயத்தையும் அதிகரிக்கும்.