தக்காளியில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் தக்காளி சேர்த்துக்கொள்வதால் நல்லதா? அதன் நன்மை - தீமைகள் பற்றி பார்க்கலாம்.
இதய ஆரோக்கியம்
தக்காளி பழத்தில் லைகோபீன் எனும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. இது சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் தக்காளி சாப்பிடுவதால், இதய ஆரோக்கிய பிரச்சனை குறையும்.
உடல் எடை
தக்காளியில் காணப்படும் வேதியல் சேர்மங்கள் - உடலில் தேங்கும் கெட்ட LDL கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது. அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ளும் உடல் பருமன் பிரச்சனையை இது தடுக்கிறது.
இரத்த கட்டிகள்
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் எதிர்கொள்ளும் இரத்த கட்டிகள் உருவாக்கத்தை தடுப்பதோடு, சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும் பண்பு தக்காளி பழத்தில் உள்ளது.
இரத்த சர்க்கரை
தக்காளியில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது, உங்களை நீண்ட நேரத்திற்கு பசி இல்லாமல் வைக்கும். மேலும், தக்காளி சாப்பிடுவதால் க்ளூரோயின் அளவு கட்டுப்படுத்தப்படும்.
இரத்த அழுத்தம்
தக்காளியில் காணப்படும் லைகோபீன் - இரத்த நாளங்களில் தேங்கும் கொழுப்பை கரைத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இதனால், நீரிழிவு நோயுடன் தொடர்புடைய இரத்த அழுத்த பிரச்சனைகள் நீங்கும்.
செரிமான பிரச்சினை
சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ளும் மலச்சிக்கல், அஜீரண பிரச்சனைகளை தவிர்க்க தக்காளி மிகவும் நல்லது. இருபினும், அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் இதனை அளவாக சாப்பிடவும்.
எப்படி சாப்பிட வேண்டும்?
தக்காளியின் கூடுதல் நன்மைகளை பெற இதனை சாறு, சட்னி, சாஸ் வடிவில் சாப்பிடலாம். குறிப்பாக வெள்ளரிக்காய், சோளம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.