உடலில் இரத்த சர்க்கரை அதிகமாக பல காரணங்கள் இருக்கலாம். இதில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் சில தினசரி பழக்க வழக்கங்களைக் காணலாம்
ஜங்க் ஃபுட்
அதிகப்படியான வெள்ளை மாவு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், குப்பை உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்
காலை உணவை தவிர்ப்பது
சில சமயங்களில் காலை நேர உணவை தவிர்ப்பது, இரத்த சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது
மது அருந்துவது
மது அருந்துவதால் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கலாம். இது உடலில் சர்க்கரை திரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது
உடல் செயல்பாட்டில் ஈடுபடாதது
நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்வதுடன், உடலை அசைக்காமல் இருப்பது, உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தலாம்
மன அழுத்தம்
அதிக அளவிலான மன அழுத்தம் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம்
புகைபிடித்தல்
புகைபிடித்தல் மற்றும் ஹூக்கா போன்றவற்றில் ஈடுபடுவதும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்
இந்த குறிப்புகள் அனைத்தும் பொதுவானவையாகும். நீரிழிவு நோய்க்கான அடிப்படை காரணங்களைத் தெரிந்து கொள்ள மருத்துவரின் ஆலோசனை பெறலாம்