உஷார்! இந்த பழக்கங்களால் சர்க்கரை அளவு ரொம்ப அதிகரிக்கும்

By Gowthami Subramani
08 Jul 2024, 17:30 IST

சில ஆரோக்கியமற்ற கெட்ட பழக்கங்களால், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இது நீரிழிவு கட்டுப்பாட்டை மீறுகிறது. இதில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் ஆரோக்கியமற்ற பழக்கங்களைக் காணலாம்

புரத உணவுகள்

அதிக புரத உணவின் ஒரு பகுதியாகத் தொகுக்கப்பட்ட பொருள்களை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவு குறைவதைத் தடுக்கிறது. உதாரணமாக, உறைந்த உணவுகள், பன்றி இறைச்சி, சலாமி போன்றவற்றை உண்பது சர்க்கரை அளவை அதிகமாக்கலாம்

உணவுமுறை

காலையில் எழுந்ததும் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அல்லது இரவில் நேரம் கடந்து உண்பது போன்றவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்

பழச்சாறு அருந்துவது

பழங்களை முழுவதுமாக சாப்பிடுவதற்குப் பதிலாக அவற்றின் சாற்றை அருந்தும் போது இரத்த சர்க்கரை அளவு அதிகமாகலாம். ஏனெனில் பழச்சாறுகளில் கூடுதல் இனிப்புக்காக சர்க்கரையை சேர்ப்பதால் அதிகமாகிறது

வெண்ணெய் உணவுகள்

வெண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் பட்டர் நான், பட்டர் கேக் போன்றவற்றை அதிகம் உண்பது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்துகிறது

உடல் செயல்பாடுகளைத் தவிர்ப்பது

உடல் செயல்பாடுகளைத் தவிர்ப்பது அல்லது சாப்பிட்ட உடனேயே ஓய்வு எடுப்பது போன்றவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்

அதிக மன அழுத்தம்

அதிகளவிலான மன அழுத்தத்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறையாமல் அதிகமாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது

தாமதமான தூக்கம்

இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது அல்லது தூக்கமின்மை பிரச்சனையும் இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதற்கான காரணமாக உள்ளது