உங்களின் இந்த தினசரி பழக்கங்கள் சர்க்கரை நோயை வரவைக்கும்!

By Karthick M
14 Aug 2024, 19:46 IST

சர்க்கரை நோயை அதிகரிக்கவும், ஏற்படுத்தவும் நமது பல தினசரி பழக்கங்களே காரணமாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இதற்கான பதிலை பார்க்கலாம்.

காலை உணவை தவிர்ப்பது

காலை உணவை தவிர்ப்பது சர்க்கரை நோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாகும். அதேபோல் காலை உணவை தவிர்ப்பது பல நோய்களுக்கும் வழிவகுக்கும்.

ஒரே இடத்தில் அமர்வது

ஒரே இடத்தில் அமர்வதும் நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஒரே இடத்தில் அமருவதும் சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே 30 நிமிடங்களுக்கு ஒருமுறை உடலுக்கு செயல்பாடு கொடுங்கள்.

ஆல்கஹால் உட்கொள்ளல்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என கூறுவதுண்டு. ஆனால் இந்த நஞ்சையே பலரும் அளவுக்கு மீறி குடிப்பதுண்டு. இது பல பாதிப்புகளுடன் நீரிழிவு நோயையும் உண்டாக்கும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தலும் 30 முதல் 40 சதவீதம் வரை சர்க்கரை நோய் பாதிப்பை உண்டாக்கும் என கூறப்படுகிறது. புகைப்பிடித்தல் பல நோய்களை உண்டாக்கும்.

போதுமான தூக்கம் இல்லாமை

போதுமான தூக்கம் இல்லாமையும், ஆழ்ந்த தூக்கம் இல்லாமையும் சர்க்கரை நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். முறையாக தூங்குவது பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.

உடற்பயிற்சி இல்லாமை மற்றும் மன அழுத்தம்

உடலுக்கு முறையான உடற்பயிற்சி இல்லாததும், மன அழுத்தமும் சர்க்கரை நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இவை அனைத்தும் உங்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்கு காரணமாகும்.