மோசமான உணவு
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் தவறான உணவுப் பழக்கமே காரணமாகும். கார்போஹைட்ரேட்டுகள், அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஜங்க் ஃபுட் போன்றவை இன்சுலின் அளவை பாதிக்கிறது. இதுவே இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது
பதற்றம்
நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். மன அழுத்தம் உடலில் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது
மோசமான தூக்கம்
தூக்கமின்மை பிரச்சனையால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகலாம். போதுமான தூக்கம் இல்லாதது இன்சுலின் அளவை பாதிக்கிறது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம்
நோய்கள் காரணமாக
சில வகை புற்றுநோய்கள் மற்றும் சில வகையான சிறுநீரக நோய்களின் காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகமாகலாம்
சில மருந்துகள்
ஸ்டீராய்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் சில வகையான ஆன்டிடிரஸன் மருந்துகள் போன்றவை இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம்
உடல் பருமன்
உடல் பருமன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். ஏனெனில் உடல் எடை அதிகரிப்பு இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்