கோடை காலம் வந்து விட்டது. எல்லோரும் மாம்பழம் மீது திசை திரும்புவர். ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா? இது குறித்து இங்கே காண்போம்.
நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை மிதமாக, சுமார் 100-150 கிராம், வாரத்திற்கு மூன்று முறை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
மாம்பழங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயாளிகளால் அதை மிதமாக எடுத்துக்கொள்ளலாம். இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளதால், இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது.
மாம்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.