சர்க்கரை அளவு குறைய வெண்டைக்காய் தண்ணி குடிச்சு பாருங்க...

By Ishvarya Gurumurthy G
12 Jun 2024, 16:03 IST

வெண்டைக்காய் தண்ணீர் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமா.? இதன் நன்மைகள் என்ன.? இதற்கான விளக்கம் குறித்து இங்கே காண்போம்.

மோசமான வாழ்க்கை முறையால், பெரும்பாலான மக்கள் இரத்த சர்க்கரை பிரச்னையால் சிரமப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பது நல்லது என்று கூறப்படுகிறது. வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவு குறையுமா என்பதை இங்கே காண்போம்.

வெண்டைக்காய் பண்புகள்

வெண்டைக்காயில் நல்ல அளவு கரையாத நார்ச்சத்து உள்ளது. இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன.

வெண்டைக்காய் தண்ணீர் தயாரிப்பது எப்படி?

வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்யவும். இதற்குப் பிறகு, 2-3 வெண்டைக்காய்களை வெட்டி 1 கிளாஸ் தண்ணீரில் ஒரே இரவில் ஊற வைக்கவும்.

வெண்டைக்காய் தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்?

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, காலையில் வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை உட்கொள்ளவும்.

சர்க்கரையில் வெண்டைக்காய் நீர்

வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது.

வெண்டைக்காய் நீரின் நன்மைகள்

வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சோகை மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.