நீரிழிவு நோயாளிகள் லஸ்ஸியை எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. இதற்கான பதிலை பார்க்கலாம்.
லஸ்ஸி குடிப்பது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தாது. மேலும் இது உடல் நீரேற்றமாக இருக்க வைப்பதுடன், பால் பொருளாக இருப்பதால் உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
லஸ்ஸியை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது, நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
முழு கொழுப்பு நிறைந்த தயிர் அதிக கலோரிகளை கொண்டுள்ளது. இந்த வகை தயிர் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்கலாம்.
லஸ்ஸி உடலை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், லஸ்ஸியைக் குடிப்பதற்கு முன்பும், பின்பும் சர்க்கரை அளவை பரிசோதிக்கலாம்.
நீரிழிவு நோயாளி தினமும் லஸ்ஸியைக் குடிக்க விரும்பினால், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.