முட்டைக்கோஸ் சிறுநீரக செயல்பாடுகளை பராமரிக்கஉதவுகிறது. ஒரு நீரிழிவு நோயாளிக்கு மிக அதிக இரத்த சர்க்கரை அளவு (600 mg/dl க்கு மேல்) இருந்தால், சிறுநீரகங்கள் கூடுதல் இரத்த சர்க்கரையை சிறுநீர் மூலம் அகற்றும், இதனால் நீரிழப்பு ஏற்படுவதோடு ரத்த சர்க்கரையும் மேலும் அதிகரிக்கும்.
உடல் எடை அதிகரிப்பும் நீரழிவு நோய்க்கான மிக முக்கிய காரணியாகும். இந்த பிரச்சனைகளுக்கு முட்டைகோஸ் சிறந்த தீர்வு. ஏனெனில் முட்டைகோஸில் கலோரிகள் மிகவும் குறைவு. இது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
முட்டைக்கோஸில் வைட்டமின் பி6, ஃபோலேட் மற்றும் பாலிஃபீனால்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பாலிபினால்கள் இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்கவும், ரத்த நாளங்களை நெகிழ்வாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.