நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த கார்ப் உணவுகள் இதோ!

By Gowthami Subramani
12 Nov 2024, 22:14 IST

கார்ப் உணவுகள்

கார்போஹைட்ரேட்டுகளில் எளிய மற்றும் சிக்கலான என இரண்டு வகை உள்ளது. இதில் எளிய கார்ப்ஸ் இரத்த சர்க்கரையின் கூர்மையை ஏற்படுத்தும். சிக்கலான கார்ப்ஸ் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இதில் நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்க்கக் கூடிய ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளைக் காணலாம்

பருப்பு

இது நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்ததாகும். இவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது இவை இரத்த சர்க்கரையில் மெதுவாக, நிலையான உயர்வை ஏற்படுத்துகிறது

தயிர்

இதில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தயிரில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உடலில் மெதுவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்க உதவுகிறது

ஆப்பிள்கள்

இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதன் குறைந்த கிளைசெமிக் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்துக்கள் மெதுவான செரிமானத்திற்கு உதவுகிறது. இவை இரத்த சர்க்கரையின் திடீர் கூர்முனைகளைத் தடுக்கிறது

பப்பாளி

இது வைட்டமின் சி உட்பட பல்வேறு நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது

குயினோவா

இது ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்ட ஒரு முழுமையான புரதம் ஆகும். இதில் அதிக நார்ச்சத்துக்கள், குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது

பூசணிக்காய்

இதில் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்துக்கள் ள்ளன. இது ஒரு சிக்கலான கார்ப் ஆகும். மேலும், இதில் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது நீரிழிவு நோய்க்கு சிறந்த தேர்வாகும்