நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த கோடைக்கால சூப்பர் வெஜிடபிள்

By Gowthami Subramani
30 May 2024, 11:23 IST

கோடைக்காலத்தில் நாம் அனைவரும் உட்கொள்ளும் பழ வகைகளில் வெள்ளரிக்காயும் ஒன்று. இதில் 95% நீர்ச்சத்துக்கள் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கும் வெள்ளரிக்காய் மிகுந்த நன்மை பயக்கும்

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்

வெள்ளரிக்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவு காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

இரத்தக் குளுக்கோஸ் கட்டுப்பாடு

நீரிழிவு நோய்க்கான எதிர்ப்பு பண்புகள் வெள்ளரியில் நிறைந்துள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை உட்கொள்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தலாம்

குறைந்த கிளைசெமிக் குறியீடு

இதில் குறைந்தளவு கிளைசெமிக் குறியீடு காணப்படுகிறது. இதன் சேர்மங்கள் கார்போஹைட்ரேட்டுகளை எளிய சர்க்கரை வடிவங்களாக உடைப்பதைத் தடுப்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவை அதிகளவில் உள்ளது. இதனை உட்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் நோயெதிர்ப்பு பலவீனத்தைத் தடுக்க வெள்ளரிக்காய் உதவுகிறது

எப்படி சாப்பிடலாம்?

நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை உணவில் பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம்

வெள்ளரிக்காய் சூப்

வெள்ளரிக்காய் சூப் அருந்துவது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இதனை உட்கொள்வது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைப்பதுடன், எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது

வெள்ளரிக்காய் சாலட்

தினமும் வெள்ளரிக்காய் சாலட் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான வைட்டமின்களை வழங்குவதுடன், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது

வெள்ளரிக்காய் ரைத்தா

நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி ரைத்தாவை உட்கொள்ளலாம். இதற்கு வெள்ளரிக்காயைத் துருவி தயிரில் கலந்து சுவைக்கு உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இதை தினமும் உட்கொள்வது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், எடையிழப்புக்கும் உதவுகிறது