உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க கற்றாழை பெரிதும் உதவுகிறது. நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் கற்றாழை சாற்றை அருந்தலாம்
இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க
கற்றாழை இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதில் நன்மை தருகிறது
எடையை சீராக வைக்க
நீரிழிவு நோய் வருவதற்கு உடல் பருமன் அதிகரிப்பு முக்கிய காரணியாகும். கற்றாழையில் உள்ள வைட்டமின் பி சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்பை ஆற்றலாக மாற்ற உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். எனவே கற்றாழையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்
சிறுநீரக நோயைத் தடுக்க
நீரிழிவு நோயின் நீண்டகால விளைவு நீரிழிவு நெஃப்ரோபதி எனப்படுகிறது. இது சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கற்றாழையில் உள்ள குளுக்கோமன்னன் பொருள் நீரிழிவு சிறுநீரக நோயின் வளர்ச்சியைத் தடுக்கிறது
இவ்வாறு நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகுந்த நன்மை பயக்கிறது. கற்றாழையை சாறு, சாலட் மற்றும் கற்றாழை டீ போன்ற வடிவில் எடுத்துக் கொள்ளலாம்