இரவில் இரத்த சர்க்கரை அதிகரிக்கிறதோ அல்லது குறைகிறதோ, இரத்த சர்க்கரையை நிலையாக வைத்திருக்க சில வகையான சிற்றுண்டி உதவுகிறது. இதில் படுக்கை நேரத்தில் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் சில சிற்றுண்டிகளைக் காணலாம்
குறைந்த கொழுப்புள்ள சீஸ்
குறைந்த கொழுப்புள்ள சீஸ் புரதத்தின் நல்ல மூலமாகும். அதே சமயம், முழு கோதுமை நிறைந்த உணவுகள் நார்ச்சத்தை சேர்க்கிறது. படுக்கை நேர சிற்றுண்டிக்கு ஆரோக்கியமான வகை பதப்படுத்தப்படாத சீஸைத் தேர்வு செய்ய வேண்டும்
ஆப்பிள் துண்டுகள் & வேர்க்கடலை வெண்ணெய்
ஆப்பிள்கள் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது. அதே சமயம் வேர்க்கடலை வெண்ணெய் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்ததாகும்
காய்கறிகள் & ஹம்முஸ்
கேரட் மற்றும் செலரி குச்சிகள், செர்ரி தக்காளி மற்றும் வெள்ளரி துண்டுகள் போன்ற ஸ்டார்ச் இல்லாத காய்கறிகள் ஒரு சிறந்த தேர்வாகும். இதில் குறைந்த கலோரிகள், கொழுப்புகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. இதை காய்கறிகளை சிறிது ஹம்முஸில் நனைக்கலாம். இது புரதத்தின் சிறந்த மூலமாகும். மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது
கிரேக்க தயிர் & பெர்ரி
நீரிழிவு நோயாளிகளுக்கு கிரேக்க தயிர் ஒரு நல்ல தேர்வாகும். இதில் அதிகளவு புரதம், குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. தயிர் உட்கொள்வது செரிமானம், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சிறிது இனிப்பு மற்றும் நார்ச்சத்துக்கு, தயிரின் மேல் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி அல்லது ப்ளூபெர்ரிகளைச் சேர்க்கலாம்
முழு கோதுமை டோஸ்ட் & அவகேடோ
அவகேடோவில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை இதயம், இரத்த சர்க்கரைக்கு நன்மை பயக்கும். ஒரு துண்டு முழு தானிய டோஸ்ட் ஆரோக்கியமான அளவிலான நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டை வழங்குகிறது
Air-popped பாப்கார்ன்
எண்ணெய் பயன்படுத்தாமல் பாப்கார்ன் தயாரிக்கப்படும் போது, அதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்றவற்றைக் கொண்ட ஒரு லேசான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். புரதத்தின் நல்ல மூலத்திற்காக சில கலப்பு நட்ஸ்களைச் சேர்க்கலாம்