போதுமான புரதம் எடுத்துக்கலயா நீங்க? அப்ப இந்த அறிகுறிகள் தோன்றலாம்

By Gowthami Subramani
05 Apr 2025, 19:09 IST

உடல் எடையிழப்பு அல்லது எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், பல உடல் செயல்பாடுகளுக்கு புரதம் அவசியமாகும். எனினும், உடல் போதுமான புரதத்தைப் பெறவில்லை என்றால் சில பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்

தொடர்ந்து பசி எடுப்பது

புரதம் உட்கொள்வது நீண்ட நேரம் நிரம்பியதாக உணர வைக்கிறது. இது உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது. இந்நிலையில், போதுமான புரதம் உட்கொள்ளாமல் இருப்பது அடிக்கடி பசி ஏற்பட்டு, அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கிறது

வீக்கம்

உடலில் திரவ சமநிலையை பராமரிப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம் இல்லாததன் காரணமாக, திசுக்களில் திரவம் உருவாகி, வீக்கம் ஏற்படலாம். குறிப்பாக, வயிறு, கைகள், கால்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு

பலவீனம்

போதுமான புரதம் இல்லாதது, தசைகளை சரியாக செயல்படாமல் போக வைக்கிறது. இதனால் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி வலிமையைக் குறைக்கிறது

எலும்பு பலவீனம்

புரதம் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், புரதம் இல்லாதது காலப்போக்கில் எலும்புகளை பலவீனப்படுத்தி, எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்

தசை நிறை இழப்பு

தசை வளர்ச்சி மற்றும் பழுது இரண்டிற்கும் புரதம் மிக முக்கியமானது. இந்நிலையில் தினசரி உணவில் புரதம் இல்லாதது தசை இழப்புக்கு வழிவகுக்கக் கூடும். இதன் காரணமாக, எப்போதும் பலவீனமாகவும் சோம்பலாகவும் உணரலாம்

அடிக்கடி நோய்வாய்ப்படுதல்

அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனினும், போதுமான புரதம் சாப்பிடாமல் இருப்பது, உடல் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட அசௌகரியத்தை ஏற்படலாம். இதனால், நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படலாம்

முடி, தோல் மற்றும் நகப் பிரச்சினைகள்

முடி, சருமம் மற்றும் நகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு புரதம் மிகவும் முக்கியமானதாகும். புரதம் குறைபாடு இருப்பின், மந்தமான சருமம், முடி மெலிந்து போவது மற்றும் நகங்கள் கூட எளிதில் உடைந்து போகலாம்