வெறும் வயிற்றில் கொய்யா இலை சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் தீரும்.

By Gowthami Subramani
10 Jan 2024, 23:31 IST

கொய்யா பழம் மட்டுமல்லாமல் கொய்யா இலையும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது. காலையில் வெறும் வயிற்றில் கொய்யா இலைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்துக் காணலாம்

கொலஸ்ட்ராலைக் குறைக்க

பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவுமுறையால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகலாம். இந்த சூழ்நிலையில் கொய்யா இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம்

செரிமானத்தை மேம்படுத்த

வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 முதல் 3 கொய்யா இலைகளை மென்று சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவது அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது

வீக்கத்தைக் குறைக்க

கொய்யா இலையின் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, உடல் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்

பல்வலி குறைய

கொய்யா இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது பல்வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது

உடல் எடை இழப்புக்கு

அதிகரித்த உடல் எடையைக் குறைக்க கொய்யா இலைகளை உட்கொள்ளலாம். இதற்கு இதில் உள்ள நார்சத்து மற்றும் வைட்டமின் சி பண்புகளே காரணமாகும்

சரும ஆரோக்கியத்திற்கு

சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதன் சாற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது. இது கறைகள் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

காலையில் வெறும் வயிற்றில் கொய்யா இலைகளை சாப்பிட்டால் மேற்கூறிய நன்மைகள் அனைத்தும் கிடைக்கும். விரும்பினால் இந்த இலைகளின் கஷாயத்தையும் அருந்தலாம். எனினும் உணவில் சேர்ப்பதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம்