வெறும் வயிற்றில் ஆம்லா சீரக தண்ணீர் குடிப்பதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
29 Mar 2025, 19:12 IST

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆம்லா சீரக தண்ணீர் அருந்துவது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதில் வெறும் வயிற்றில் ஆம்லா சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்

சீரான இரத்த சர்க்கரைக்கு

நெல்லிக்காய் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், சீரகம் குடலில் குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகிறது. இந்தக் கலவையை உட்கொள்வது நீரிழிவு நோயை நிர்வகிக்கவும், இன்சுலின் எதிர்ப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

செரிமான ஆரோக்கியம்

ஆம்லாவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமானப் பாதை வழியாக உணவு சீராக செல்ல உதவுகிறது. மேலும், சீரகத்தில் தைமால் உள்ளது. இது வயிற்றை அதிக இரைப்பை சாறுகளை உற்பத்தி செய்வதற்கு சமிக்ஞை செய்கிறது. இதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

நச்சு நீக்கியாக

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. அதே சமயம், சீரக தண்ணீர் அருந்துவது உடலிலிருந்து அதிகப்படியான நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இது இயற்கையான சுத்திகரிப்பாக செயல்பட்டு, புத்துணர்ச்சியுடன் வைக்கிறது

தொற்றுக்களைத் தடுக்க

ஆம்லாவில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உடலை நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அதே சமயம், சீரகம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை பருவகால நோய்களைத் தடுக்க உதவுகிறது

இயற்கையான பளபளப்பைத் தர

இந்த பானத்தைத் தொடர்ந்து உட்கொள்வது பருக்களைக் குறைக்கவும், முன்கூட்டிய வயதாவதைத் தாமதப்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது

முடி உதிர்வைக் குறைக்க

ஆம்லாவில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது பொடுகைக் குறைக்கவும், முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், சீரகத் தண்ணீர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வழிவகுக்கிறது. இது தலைமுடி பளபளப்பாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது