குழந்தையை சீக்கிரமா பேசவைக்கிறது எப்படி?

By Kanimozhi Pannerselvam
28 Sep 2024, 20:00 IST

குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போது, ​​அவர்களின் வாயில் இருந்து அதிக அளவில் உமிழ்நீர் சுரக்கிறது குழந்தைகள் எவ்வளவு சீக்கிரம் உமிழ்நீர் சுரக்க ஆரம்பிக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள் என்று பலர் கூறுகிறார்கள்.

ஒரு வருடத்திற்குப் பிறகு சில குழந்தைகளுக்கு பேசுவது இயல்பானது. ஆனால் சில குழந்தைகள் இரண்டு வயதில் கூட பேச மாட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். உங்கள் குழந்தை விரைவாக பேச விரும்பினால், அவரிடம் நிறைய பேச வேண்டும். நீங்கள் பேசுவதை கவனித்தே, குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.

பொம்மைகள் குழந்தைகளை பேச வைக்க சிறந்த கருவி. தற்போது மார்க்கெட்களில் வார்த்தைகளை உச்சரிக்கக்கூடிய பொம்மைகள் கிடைக்கின்றன. தாய்மார்கள் பொம்மைகளுடன் பேசி விளையாட குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். இதன் மூலமாக குழந்தையின் கேட்கும் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கிறது.

உறக்க வைப்பதற்கு முன்பாக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கதைகளை சொல்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஏன் தெரியுமா? ஏனென்றால் இது ஒவ்வொரு நாளும் புதிய சொற்களைக் கற்றுக்கொண்டு அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

ஒவ்வொரு தாயும் தங்கள் குழந்தைகளுக்கு உறவினர்களைப் பற்றி சொல்ல வேண்டும், இது உங்கள் தாத்தா, இது உங்கள் பாட்டி. இதைச் செய்வதன் மூலம், குழந்தைகள் அந்த வார்த்தைகளை நினைவில் வைக்க முயற்சிப்பார்கள். இது அவர்களை மெதுவாக பேச ஊக்குவிக்கும்.