உங்க குழந்தைக்கு நிமோனியா இருப்பதற்கான அறிகுறிகள்

By Gowthami Subramani
12 Nov 2024, 19:32 IST

சிறு குழந்தைகளுக்கு நிமோனியா தீவிரமாக இருக்கலாம். எனவ, குழந்தைகளை நிம்மோனியாவிலிருந்து பாதுகாக்க அதன் அறிகுறிகள் சிலவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம். இதில் குழந்தைகளுக்கான நிமோனியா அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்

அதிக காய்ச்சல்

குழந்தைகளுக்கு அதிக காய்ச்சல் இருப்பின் அது ஒரு தொற்றுநோயைக் குறிக்கலாம். எனவே அவர்களின் வெப்பநிலையை கவனிப்பது அவசியமாகும்

தொடர் இருமல்

குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான இருமல் ஏற்படுவது அதிலும் குறிப்பாக, இருமல் மோசமாகி அல்லது சளியை உள்ளடக்கியிருந்தால் அது நிம்மோனியாவின் அறிகுறியாக இருக்கலாம்

சோர்வு, பலவீனம்

குழந்தை வழக்கத்திற்கு மாறாக சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ இருப்பின், அது நிம்மோனியாவிற்கான அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, இது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் ஏற்படலாம்

வேகமான சுவாசம்

நிம்மோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் விரைவான, ஆழமற்ற சுவாசத்தை அடையலாம். இதில் குழந்தைகள் வேகமான சுவாசம் அல்லது மூச்சு பிடிப்பதில் சிரமம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இது குழந்தைகளில் நிமோனியா இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும்

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை கண்டால், குழந்தைகளை குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. ஆரம்பகால கண்டறிதலின் மூலம் பயனுள்ள சிகிச்சையைப் பெறலாம்