குறை மாத குழந்தையை இப்படி பாதுக்கோங்க..

By Ishvarya Gurumurthy G
26 Feb 2024, 07:26 IST

குறைமாதக் குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்குத் தேவையான சில பராமரிப்பு குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து முழுமையாக அறிய ஸ்வைப் செய்யவும்.

தூய்மை

புதிதாகப் பிறந்த குழந்தையைத் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க, அவர்களின் தூய்மையை கவனித்துக் கொள்ளுங்கள். தூய்மையை கவனித்துக்கொள்வதன் மூலம், குழந்தையின் சரியான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும்.

வெப்பநிலை

புதிதாகப் பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு உங்கள் அறையின் வெப்பநிலையைக் கவனித்துக் கொள்ளவும். வெப்ப நிலைக்கு ஏற்றச் சரியான ஆடையைக் குழந்தைக்குத் தேர்வு செய்யுங்கள். சுற்றியுள்ள சூழல் வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தாய்ப்பால்

தாய்ப்பாலில் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. குழந்தையின் வளர்ச்சிக்கும், உடல் எடை அதிகரிப்பதற்கும் தாய்ப்பால் அவசியம்.

தொற்று

குறைமாதக் குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவர்கள் இரத்த சோகைக்கு ஆளாகலாம். இது தவிர, மஞ்சள் காமாலை, மூச்சுத்திணறல், குறை வெப்பம் போன்ற நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.