பிறந்த குழந்தையின் பராமரிப்பு முறைகள்.!

By Ishvarya Gurumurthy G
28 Feb 2024, 07:23 IST

பச்சிளங்குழந்தை பராமரிப்பு என்பது சிரமமாக இருக்கும். குழந்தை பிறந்தவுடன் கையாள வேண்டிய சில பராமரிப்பு முறைகளைப் பற்றிக் காணலாம்.

தலை பகுதி

குழந்தையின் உச்சிப்பகுதியும், நெற்றிப்பகுதியும் சற்று புடைத்து இருப்பது போல இருக்கும். பிறந்த குழந்தையின் கபால எலும்புகள் மென்மையாக இருக்கும். எனவே, அழுத்தி பிடிக்காமல் மென்மையான பிடிக்க வேண்டும்.

கண்களில் அழுக்கு

இயல்பாகவே, பிறந்த குழந்தையின் கண்களிலிருந்து அழுக்குகள் வெளியேறிக் கொண்டே இருக்கும். இதனை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

காது கேட்கும் திறன்

குழந்தைக்கு காது கேட்கிறதா என்பதை மெதுவாக காதில் சொடக்கு போட்டு கூப்பிடலாம். சத்தம் வரும் இடத்தில் குழந்தையின் கண்கள் பார்க்கும் போது காது கேட்பதை உறுதி செய்யலாம்.

தொப்புள் கொடி

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியைக் கட் செய்து க்ளிப் மாட்டி விடுவார்கள். இது அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் உதிர்ந்து விடும். எனினும், அவற்றில் தண்ணீர் படாமலும், கிருமித் தொற்று ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எதிர்ப்புச் சக்தி

குழந்தையைத் தூக்கும் போது சரியான முறையில் கைகளைக் கழுவி அதன் பின்னரே தூக்க வேண்டும். குறிப்பாக, நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் குழந்தையைத் தரக்கூடாது.