சப்போட்டா இனிப்பு சுவை மிக்க ஆரோக்கியமான பழமாகும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையைத் தருகிறது. ஆனால், இதை குழந்தைகளுக்குக் கொடுப்பதா? வேண்டாமா? என்பது குறித்து காண்போம்
குடலை சுத்தப்படுத்த
சப்போட்டாவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது. மேலும், இது மலச்சிக்கல்லைத் தடுக்கிறது
எலும்பு வலிமைக்கு
இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்றவை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான வலிமையைத் தருகிறது
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
வைட்டமின் சி சத்துக்கள் சப்போட்டாவில் உள்ளது. இவை ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், கொலாஜனை உற்பத்தி செய்யவும் உதவுகிறது
ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட
சப்போட்டாவில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது
இருமல் மற்றும் சளி
சப்போடாவில் உள்ள இராசயனக் கலவைகள், சுவாசக் குழாய் மற்றும் மூக்கின் பாதையிலிருந்து சளியை அகற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது நெரிசல் மற்றும் நாள்பட்ட இருமலைத் தடுக்க உதவுகிறது
கண்பார்வை மேம்பாட்டிற்கு
கண்பார்வை மேம்பாட்டிற்கு உதவும் வைட்டமின் ஏ சத்துக்கள் சப்போட்டாவில் நிறைந்துள்ளது. இவை நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் உதவும்