குழந்தைகள் வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக இரட்டை குழந்தை வளர்க்கும் போது சில முக்கிய விஷயங்களை கையாள வேண்டியது அவசியம்.
இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சலுகைகளை வழங்குவது முக்கியம். ஒரு குழந்தையை மட்டும் புறக்கணித்தால் எதிர்மறையான தாக்கத்தை எதிர்கொள்ளும்.
ஒருவரை ஒருவர் எப்போதும் ஒப்பிடக் கூடாது. இப்படி செய்வதால் தங்கள் உடன் பிறந்தவர்கள் மீதே அவர்களுக்கே அறியாமல் வெறுப்பு ஏற்படும்.
குழந்தைகள் இரட்டையர்களாக என்றாலும், அவர்கள் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆர்வத்தை தனித்தனியே அறிந்து ஊக்குவிப்பது முக்கியம்.
இரட்டை குழந்தைகள் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பார்கள். ஒவ்வொரு குழந்தையும் பொறுப்புகளை உணர்ந்திருக்க வேண்டும். பெற்றோர் பொறுப்புகளை பிரித்து வழங்க வேண்டியது கடமை.
சில பெற்றோர்கள் பகிர்ந்து கொடுக்கும் விஷயங்களை கற்றுக் கொடுக்க மறக்கிறார்கள். இரட்டை குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுப்பதை கற்றுக் கொடுப்பது மிக அவசியம்.