குளிர் காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க முக்கியமான 6 டிப்ஸ்!
By Kanimozhi Pannerselvam
22 Nov 2024, 08:39 IST
தேவையற்ற மருந்துகளைத் தவிர்க்கவும்
பொதுவான சளி மற்றும் காய்ச்சலுக்கு மருத்துவரின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குழந்தைக்கு எந்த ஆண்டிபயாடிக் மருந்துகளையும் கொடுக்காதீர்கள்.
நீரேற்றம்
குளிர்காலத்தில் கூட குளிர்ந்த நீரைக் குடிப்பதை குழந்தைகள் விரும்புவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த தண்ணீரைக் கொடுப்பது நல்லது. மேலும், போதுமான நீரேற்றம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
குளிர்காலத்தில் பிரஞ்சு ப்ரைஷ், பாஸ்தா, பர்கர்கள் அல்லது மற்ற வறுத்த உணவுகளுக்குப் பதிலாக வறுத்த மக்கானா, பாப்கார்ன், வேகவைத்த சோளம் மற்றும் நட்ஸ் போன்ற ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களைக் கொடுங்கள்.
வெளிப்புற உடற்பயிற்சி
குழந்தை வெளியில் உடற்பயிற்சி செய்வதையும், மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதையும், போதுமான சூரிய ஒளியைப் பெறுவதையும் உறுதிப்படுத்தவும். தவறாமல் உடற்பயிற்சி செய்வது குழந்தையின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும்.
தூக்கம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தரமான தூக்கத்தை குழந்தைகள் பெற வேண்டும். ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பது குழந்தை வளரவும் நோயற்ற வாழ்க்கையை வாழவும் உதவும்.
புரதச்சத்து நிறைந்த உணவுகள்
குழந்தையின் மெனுவில் பனீர், சிக்கன், சோயா, கொண்டைக்கடலை மற்றும் பால் ஆகியவற்றை பெற்றோர்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும். உணவில் போதுமான அளவு புரதம் தசை வளர்ச்சி மற்றும் காயம் ஏற்பட்டால் மீட்க உதவுகிறது.