குழந்தையின் எடை அதிகரிப்பதை வைத்து தான் அவர்களின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. அப்படி குழந்தையின் எடையை அதிகரிக்க என்ன செய்வது என பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஃபார்முலா பால் கொடுப்பது அவர்களின் எடையை அதிகரிக்க சிறந்த வழி என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் ஃபார்முலா பாலை விட தாய் பால் தான் மிக நல்லது.
குழந்தைகள் தாய் பால் குடித்து ஒல்லியாக இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை. அது மரபணு ரீதியாக இருக்கலாம். ஆரோக்கியமான எடை அதிகரிப்பு என்பது மிக முக்கியம்.
குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் புரதம், பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், இறைச்சி, மீன், முட்டை, பால் பொருட்கள், பீன்ஸ், பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற உணவுகள் சாப்பிடவும்.
குழந்தைகள் விஷயத்தில் எப்போதும் சமரசம் என்பதே வேண்டாம். குழந்தைகள் ஏதேனும் அசௌகரியத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.