இருமல், சளி, அடிக்கடி மூக்கு ஒழுகுதல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்டவை ஏற்பட்டு குழந்தைகளில் மார்பு நெரிசல் பிரச்சனையை ஏற்படுத்தத் தொடங்குகிறது.
குழந்தைகள் மூச்சு விடும்போது சத்தம் ஏற்பட்டால் அவர்களுக்கு மார்பு நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
உங்கள் குழந்தையை வெந்நீரில் குளிக்க வைக்கவும், இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் மார்பில் படிந்திருக்கும் சளியை அகற்ற உதவும்.
உங்கள் குழந்தையின் நெற்றி, மூக்கு, நெஞ்சு, தலையின் கீழ் பகுதியில் வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.
உங்கள் குழந்தையின் முதுகில் மெதுவாக சூடு ஏற்படத் தேய்ப்பது மார்பில் சிக்கியுள்ள சளியை தளர்த்தி வெளியேற்ற உதவும்.
குழந்தையின் நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், மார்பு நெரிசல் பிரச்சனை தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.