ஜங்க் ஃபுட், சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
உடல் செயற்பாடுகள்
குழந்தைகளை குறைந்தது 60 நிமிடம் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக, விளையாடுவது, ஓடுவது, குதிப்பது போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கலாம்.
வீடியோ கேம் வேண்டாம்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, வீடியோ கேம் விளையாடுவது, டிவி அல்லது செல்போன் பார்ப்பதை பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது.
முன்னூதாரணம்
உங்கள் முழு குடும்பமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை பின்பற்றினால், குழந்தைகளும் உடனடியாக அதனை ஏற்றுக்கொள்வார்கள்.
தூக்கம்
பசியை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன் சமநிலையின்மையைத் தடுக்க குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் தேவை.
மருத்துவ பரிசோதனை
சில சமயங்களில் மலச்சிக்கல், ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனைகள் கூட உடல் எடைக்கூட காரணமாக இருக்கலாம். எனவே குழந்தைகளின் எடையை அவ்வப்போது பரிசோதித்து, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.