இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்கு தீவிரமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டியது அவசியம். இதில் அலட்சியம் வேண்டாம்.
வெப்பநிலை அதிகமாக இருந்தால்
தாயின் அரவணைப்பில் இருக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடல் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அதிக காய்ச்சல் இருப்பது இயல்பானது அல்ல. ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, காய்ச்சல் இருந்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள கூடாது.
கண்கள் மேலே சொருகுதல்
இயல்பாக இருக்கும் குழந்தையின் கண்கள் திடீரென மேல் நோக்கி நகரும் நிலை, வலிப்புநோயின் அறிகுறியாகும். இந்த நேரத்தில் குழந்தை சுயநினைவின்றி இருக்கலாம், உடலும் உள்ளுணர்ச்சியை வெளிக்காட்டாது. ]இந்த சூழலிலும் தாமதிக்காமல், குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
சிவந்த கண்கள்
குழந்தையின் கண் சிவப்பாக இருப்பது, கண்களில் நீர் வடிதல் அல்லது ஒட்டுதல் போன்றவை இமைப்படல அழற்சியின் அறிகுறிகளாக இருக்கலாம்.இந்தப் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், குழந்தை பால் குடிப்பதில் விருப்பமின்றி இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பிறந்த குழந்தையின் அழுகை
உங்கள் குழந்தை அதிகமாக அழுதால், அழுவதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பசி, தூக்கம், ஈரமான டயப்பர் மாதிரியான காரணங்களுக்காக அழுகிறாரா என்பதை சரிபார்க்கவும். இந்தக் காரணங்களின்றி, குழந்தை சத்தமாக அழும் பட்சத்தில், அவருக்கு வேறு ஏதேனும் உள் பிரச்சனை இருக்கலாம். குழந்தையின் அழுகையில் வித்தியாசத்தை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
மூக்குத்துவார பிரச்னைகள்
குழந்தை சுவாசிக்கும்போது சத்தம் கேட்டால், அவர் வேகமாக சுவாசிக்கிறார் என்று அர்த்தம். இந்நிலையில் குழந்தையின் வயிறு உள்நோக்கி இறங்குவதை நீங்கள் பார்க்கலாம். இந்த அறிகுறிகள் மூலம் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.