குழந்தைகளின் பல் ஆரோக்கியத்துக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

By Gowthami Subramani
19 Feb 2025, 19:05 IST

குழந்தைகளுக்கு நல்ல வாய்வழி சுகாதாரம் பற்றி கற்பிப்பது, அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான பற்களைப் பெறுவதுடன், எதிர்காலத்தில் பல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவும் சரியான நேரமாகும்

பல் துலக்குவது

குழந்தைகள் ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவதை வழக்கமாக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஃப்ளோரைடு பற்பசையைக் கொடுக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக பல் துலக்கி, அவர்களை உற்சாகப்படுத்தலாம்

ஃப்ளோஸ் செய்வது

பல் துலக்க முடியாத இடங்களை சுத்தம் செய்வதற்கு ஃப்ளோஸ் உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை ஃப்ளோஸ் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். இதை அவர்களுக்கு ஒரு விளையாட்டாக மாற்றலா,

அதிக தண்ணீர் குடிப்பது

தண்ணீர் அருந்துவது பற்களிலிருந்து உணவை நீக்குவதுடன், பற்களை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. இயற்கையாகவே பற்களில் உள்ள துவாரங்களைத் தடுக்க ஃப்ளோரைடு கலந்த தண்ணீரைக் குடிக்க குழந்தைகளை ஊக்குவிக்கலாம்

சர்க்கரையைத் தவிர்ப்பது

குழந்தைகளுக்கு அதிகளவு மிட்டாய், சோடா போன்ற குளிர்பானங்கள் மற்றும் பற்களில் ஒட்டும் சிற்றுண்டிகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது துவாரங்களை ஏற்படுத்தலாம். எனவே வலுவான பற்களுக்கு மொறுமொறுப்பான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுக்கலாம்

வழக்கமான பல் பரிசோதனை

ஆரம்பகால பிரச்சினை கண்டறிதலுக்காக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பல் பரிசோதனைகளைத் திட்டமிட வேண்டும். குழந்தைகளுக்கு ஆர்வம் காட்டுவதற்காக வேடிக்கையான ஸ்டிக்கர் அல்லது பொம்மையைத் தேர்ந்தெடுக்கலாம்

ஆரோக்கியமான பழக்கங்களைக் கையாள்வது

பெற்றோர்கள் தொடர்ந்து பல் துலக்குதல் மற்றும் பல் ஃப்ளாஸ் பயன்படுத்தும்போது, குழந்தைகளும் அதைப் பின்பற்றுவர். வாழ்நாள் முழுவதும் இந்த பழக்கங்களைக் குழந்தைகளுக்கு உருவாக்க பல் பராமரிப்பை ஒரு குடும்ப நடவடிக்கையாக மாற்றலாம்