உங்க குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கால்சியம் நிறைந்த உணவுகள்

By Gowthami Subramani
13 Feb 2025, 18:39 IST

வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு மட்டுமல்லாமல் தசைகளைத் தளர்த்தவும், நரம்புகள் சமிக்ஞைகளை அனுப்பவும் கால்சியம் மிகுந்த பங்கு வகிக்கிறது. இது ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்கிறது

குழந்தைகளுக்கு கால்சியம்

குழந்தைகள் குறிப்பாக பருவமடையும் போது, போதுமான கால்சியம் கிடைப்பது அவசியமாகும். கால்சியம் குறைபாடு காரணமாக பலவீனமான எலும்புகள், எலும்பு முறிவுகள், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை ஏற்படுகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுகள் உட்கொள்ளலாம்

ராகி

இது நார்ச்சத்துக்கள் மற்றும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியமாகும். இது செரிமான ஆரோக்கியத்திற்கும், குழந்தைகளை நீண்ட நேரம் நிரம்பியதாக வைத்திருக்கவும் உதவுகிறது

சோயா மற்றும் சோயா பொருட்கள்

சோயா பால், டோஃபு மற்றும் சோயாபீன்ஸ் போன்றவற்றில் கால்சியம் மற்றும் உயர்தர தாவர அடிப்படையிலான புரதங்கள் உள்ளது. இது குழந்தைகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்

இலை கீரைகள்

கீரை வகைகளில் கால்சியம், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் கால்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவுகிறது

நட்ஸ்

பாதாம், வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகளில் கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. எனினும் ஒவ்வாமை மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இந்த கால்சியம் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம், குழந்தைகள் வலுவாக வளரவும், சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது