குழந்தைக்கு எப்போது, எப்படி, எந்த எண்ணெயில் மசாஜ் செய்ய வே
By Kanimozhi Pannerselvam
01 Apr 2024, 18:25 IST
குழந்தை மசாஜ் செய்வதற்கான சிறந்த எண்ணெய்
இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் படி, எண்ணெய் இல்லாமல் மசாஜ் செய்வதை விட குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஆனால் ஆலிவ் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் இந்த எண்ணெய் குழந்தையின் சருமத்தை சேதப்படுத்தக்கூடும்.
மசாஜ் செய்ய சரியான நேரம்
கோடை காலத்தில் குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். அதே நேரத்தில் குளிர்ந்த காலநிலையில் குளித்த பிறகு மசாஜ் செய்ய வேண்டும். குழந்தை அமைதியாக இருக்கும்போது கூட, உணவளித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு குழந்தைக்கு மசாஜ் செய்வது முக்கியம்
நீங்கள் குழந்தையை பொறுமையாகவும், மென்மையாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் மசாஜ் செய்ய வேண்டும், இதனால் குழந்தை பாதுகாப்பாக இருக்கும். ஒரு குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது ஓவராக அழுத்தம் கொடுக்காமல், குழந்தையின் தலைக்கு மென்மையான அழுத்தம் கொடுத்து நன்றாக சப்போர்ட் செய்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மசாஜ்
பிறந்த முதல் ஆண்டில், குழந்தையின் தோல் நிலையான வளர்ச்சி கட்டத்தில் இருக்கும். இந்த நிலையில் குழந்தையின் தோல் மிகவும் மென்மையாக இருந்தாலும், குழந்தை மருத்துவரிடம் அனுமதி பெற்று மசாஜ் செய்ய பயப்பட தேவையில்லை. முதல் சில வாரங்களுக்கு மென்மையான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யவும்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் மசாஜ் செய்ய வேண்டாம்
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் போது, அவர்களின் காலில் இருந்து தொடங்குவது நல்லது. கீழ்நோக்கி மசாஜ் செய்வது குழந்தையை ரிலாக்ஸ் செய்யும். மசாஜ் செய்யும் போது குழந்தையுடன் கண் தொடர்பு கொள்வது முக்கியம்.