மற்ற காய்கறிகளைப் போலவே, பீட்ரூட் குழந்தைகளுக்கு பாதுகாப்பான காய்கறியாக அமைகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
பீட்ரூட்டின் ஊட்டச்சத்துக்கள்
பீட்ரூட்டில் வைட்டமின் பி, சி, இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை குழந்தைகளுக்கு அளிக்கலாமா என்பது குறித்து காணலாம்
எப்போது கொடுக்கலாம்?
நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகளுக்குத் திட உணவைக் கொடுக்க ஆரம்பிக்கும் போது பீட்ரூட்டினைக் கொடுக்கலாம். அதாவது, 6 முதல் 12 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பீட்ரூட்டை கொடுக்கலாம்
எப்படி அளிக்கலாம்?
குழந்தைகளுக்கு பீட்ரூட்டினை பச்சையாக கொடுக்கக் கூடாது. முறையாக சமைத்த பிறகே பீட்ரூட்டினை குழந்தைகளுக்கு அளிக்கலாம்
மசித்து அளிப்பது
இதே போன்று குழந்தைகளுக்கு பீட்ரூட்டினை சிறிய துண்டுகளாக நறுக்கி தருவதை விட, மசித்து தரலாம். இது எளிதில் செரிமானம் அடைய வழிவகுக்கும்
பீட்ரூட் நன்மைகள்
வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த பீட்ரூட்டினை குழந்தைகளுக்குத் தருவது இரத்தசோகை, கண்பார்வை பிரச்சனை, குளோசிடிஸ் போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது
செரிமானத்தை மேம்படுத்த
நார்ச்சத்து நிறைந்த பீட்ரூட் நுகர்வு குழந்தைகளுக்கு செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் ஈ போன்றவை பீட்ரூட்டின் சிறந்த ஆதாரமாகும். இது குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவுகிறது
குறிப்பு
குழந்தையின் எடை மற்றும் உடல் நிலையைப் பொறுத்து பீட்ரூட்டின் பயன்கள் மாறுபடும். எனவே குழந்தைக்கு பீட்ரூட் அளிக்கும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது