புகைபிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய்க்கான காரணங்கள்

By Gowthami Subramani
31 Jul 2024, 13:30 IST

பெரும்பாலும் புகைபிடிப்பவர்களுக்கே நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டாகலாம். ஆனால், புகைபிடிக்காதவர்களும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் அதற்கான காரணங்களைக் காணலாம்

மற்றவர்களின் புகை வெளிப்பாடு

இது இரண்டாவது புகை என்றழைக்கப்படுகிறது. புகைபிடிப்பவர்களை விட அவர்களுடன் இருப்பவர்களே புகையை உள்வாங்கும் வாய்ப்பு அதிகமாகிறது. இது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது

ஆரோக்கியமற்ற உணவு

ஆர்சனிக் நிறைந்த நீர், இறைச்சி மற்றும் ஆழமான வறுத்த உணவுகள் நுரையீரல் புற்றுநோயின் அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும், சில ஆய்வுகளில் பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க உதவுவதாகக் கூறப்படுகிறது

ரேடான் வாயு

ரேடான் வாயுவை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த வாயு நுரையீரல் செல்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக அமைகிறது

காற்று மாசுபாடு

அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, நுரையீரல் புற்றுநோய்க்கான காரணமாக அமைகிறது. மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கார்கள் போன்றவை நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாகும்

அதிக இரசாயன பயன்பாடு

இரசாயனங்கள், நச்சு வாயுக்கள், தூசிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவை நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த அதிக இரசாயன பயன்பாடு காரணமாகவே நுரையீரல் புற்றுநோய் உண்டாகிறது

மரபியல் காரணம்

புகைபிடிக்காதவர் குடும்பத்தில் நுரையீரல் புற்றுநோய் வரலாறு இருப்பின், அந்த நபருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கலாம். அதிக கதிர்வீச்சு பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது