நாம் வீட்டில் பயன்படுத்தும் சில பொருள்கள் கேன்சரை ஏற்படுத்தலாம். இதில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கேன்சரை ஏற்படுத்தும் சில வீட்டுப் பொருள்களைக் காணலாம்
சுத்தப்படுத்தும் பொருள்கள்
வீட்டில் நாம் பயன்படுத்தக் கூடிய சில துப்புரவுப் பொருள்களில் கேன்சரை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நிறைந்திருக்கலாம். எனவே இயற்கை அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது
பிளாஸ்டிக் கொள்கலன்கள்
சில பிளாஸ்டிக் கொள்கலன்கள், குறிப்பாக மறுசுழற்சி செய்யக் கூடிய கலன்கள் ஆனது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடலாம். இதனைத் தவிர்க்க உணவு பொருட்களை சேமிக்க கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எஃகு கொள்கலன்களைப் பயன்படுத்தலாம்
நான்-ஸ்டிக் பாத்திரங்கள்
பல்வேறு நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை ஏற்படுத்தலாம். அதற்குப் பதிலாக துருப்பிடிக்காத எஃகு, பீங்கான் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்
வாசனை மெழுகுவர்த்திகள்
பல வாசனைப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நிறைந்திருக்கலாம். பாதுகாப்பான தேர்வுக்கு சோயா மெழுகுவர்த்திகள் அல்லது அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற இயற்கை பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்
எலக்ட்ரானிக்ஸ்
Wi-Fi மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்றவை பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருப்பினும், சில ஆய்வுகளின் படி, Wi-Fi-ன் மின்காந்தப் புலத்தின் நீண்ட நேரம் வெளிப்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். இந்நிலையில் தேவையற்ற Wi-Fi சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது