உலகளவில் காணப்படும் மிகவும் பொதுவான வகை புற்றுநோய்களில் குடல் புற்றுநோயும் ஒன்றாகும். மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை காரணமாக புற்றுநோய் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. இதில் குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் உணவுகளைக் காணலாம்
சர்க்கரை பானங்கள்
பழச்சாறுகள், சோடாக்கள் போன்ற சர்க்கரை-இனிப்பு பானங்களில் அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் நிறைந்துள்ளது. இது குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பன்றி இறைச்சி, தொத்திறைச்சி மற்றும் பெப்பரோனி போன்றவை பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இது அதிக புற்றுநோய் அபாயங்களுடன் இணைக்கப்படுகிறது
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சிப்ஸ் போன்ற பேக் செய்யப்பட்ட பொருள்கள், இயற்கையில் இல்லாத முன் தொகுக்கப்பட்ட உணவுகள் குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்கு மாற்றாக முழு, புதிய உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்
சிவப்பிறைச்சி
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சிகளை உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை 18% அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது
மது அருந்துவது
மது அருந்துதலின் காரணமாக, குறிப்பாக தினமும் ஆல்கஹால் உட்கொள்வது, பெருங்குடல் புற்றுநோயின் வாய்ப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மற்ற புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கலாம்