சில ஆரோக்கியமான பழக்கங்கள் புற்றுநோயைத் தடுக்க பெரிதும் உதவுகிறது. இதில் புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்களைக் காணலாம்
ஆரோக்கியமான உணவு
அதிகளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். விலங்கு மூலங்களிலிருந்து பெறப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பு உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்கவும்
உடல் எடை மேலாண்மை
உடல் பருமன் காரணமாக ஏற்படும் நோய்களில் புற்றுநோயும் ஒன்று. எனவே உடலில் அதிக கொழுப்பை சேர விடாமல் ஆரோக்கியமான உடல் எடை பராமரிப்பைக் கையாள வேண்டும்
மது அருந்துதல்
அதிகளவிலான மது அருந்துவதல் புற்றுநோய் மற்றும் இன்னும் பிற நோய்களை ஏற்படுத்துகிறது. மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. எனினும் மது அருந்தினால் அளவாக மட்டும் குடிக்கலாம்
முறையான சன்ஸ்கிரீன் பயன்பாடு
சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவது சூரிய பாதிப்பு, தோல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
தடுப்பூசி செலுத்துதல்
சில வைரஸ் தொற்றுகளுக்கு எதிரான பாதுகாப்பின் மூலம் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. HPV தடுப்பூசியின் உதவியுடன் HPV ஆல் ஏற்படும் 90% புற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்
முன்கூட்டியே கண்டறிதல்
வழக்கமான சுய பரிசோதனைகள் மற்றும் புற்றுநோய்க்கான வழக்கமான ஸ்கிரீனிங் போன்றவை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதன் ஆரம்பகால கண்டறிதல் சிகிச்சைக்கு முக்கியமானதாகும்