கேன்சர்
அன்றாட வாழ்வில் சில பழக்க வழக்கங்களைக் கையாள்வதன் மூலம் கேன்சர் வராமல் தவிர்க்க முடியும். இதில் கேன்சர் வராமல் தடுக்க உதவும் அன்றாட பழக்க வழக்கங்களைக் காணலாம்
சமச்சீரான உணவுமுறை
பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்
உடல் செயல்பாடு
தினமும் வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதுடன், வழக்கமான ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்
ஆரோக்கியமான உடல் எடை
பல வகையான புற்றுநோய்களுக்கு உடல் பருமனே முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. எனவே சீரான உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடு மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம்
சிவப்பிறைச்சியைத் தவிர்ப்பது
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சிகள் போன்றவை அதிக புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையதாகும். எனவே புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க சிவப்பிறைச்சியைத் தவிர்ப்பது அவசியமாகும்
மது அருந்துவதைத் தவிர்த்தல்
அதிகப்படியான ஆல்கஹால் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம். மது அருந்துதலைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வராமல் தவிர்க்க முடியும்
புகைபிடிப்பதை நிறுத்துவது
நுரையீரல் புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களுக்கு புகைபிடித்தல் ஒரு முக்கிய ஆபத்து காரணியாக அமைகிறது. புகைபிடிப்பதை நிறுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோயைத் தவிர்க்கலாம்
சன்ஸ்கிரீன் பயன்பாடு
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க முடியும். எனவே தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க முடியும்