புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க இதை செய்யவும்

By Ishvarya Gurumurthy G
12 Mar 2024, 10:30 IST

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கண்டிப்பாக செய்யுங்கள்.

மிதமான உடற்பயிற்சி

தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது மிதமான உடற்பயிற்சி செய்யலாம். இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. சுறுசுறுப்பான நடை, யோகா, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மெதுவாக நீச்சலடித்தல் போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம்.

வேகமான உடற்பயிற்சி

வேகமான உடற்பயிற்சி உங்கள் மூச்சு இயக்கத்தையும், இதயத் துடிப்பையும் அதிகரிக்கிறது. இதனால் நிறைய கலோரிகள் எரிக்கப்படும். ஏரோபிக்ஸ், கூடைப்பந்து, கால்பந்து, வலைப்பந்து, மெதுவாக ஓடுதல்(ஜாகிங்), ஓடுதல், ஸ்குவாஷ் போன்ற பயிற்சிகளை செய்யவும்.

அடிப்படை செயல்பாடுகள்

தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். ஆனால் சில காரணங்களால் உங்களால் தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால், நீங்கள் சில அடிப்படை செயல்பாடுகளைச் செய்யலாம். அதாவது கார் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல், குழந்தைகளுடன் விளையாடுதல், நடை, படிக்கட்டுகளில் ஏறுதல் போன்றவற்றை செய்யலாம்.

மற்ற முக்கியமான செயல்பாடுகள்

நீண்ட நேரம் உட்காருவது பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், 10,000 அடிகள் நடக்க முயற்சிக்கவும். முடிந்தவரை நடக்க முயற்சி செய்யுங்கள்.