மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சூப்பர் உணவுகள் இதோ!

By Gowthami Subramani
08 Oct 2024, 09:31 IST

உடல் எடை, உணவுமுறை, புகைப்பிடித்தல் மற்றும் மரபியல் போன்ற பல்வேறு காரணங்களால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதில் மார்பக புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க உதவும் சில உணவுகளைக் காணலாம்

மாதுளை

மாதுளையில் எலாகிடானின்கள் என்ற சேர்மங்கள் உள்ளது. இது மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க உதவுகிறது. இதற்கு மாதுளை சாறு அருந்தலாம். மேலும் சாலட்கள், ஓட்ஸ், தயிர் போன்றவற்றில் சேர்த்து உட்கொள்ளலாம்

முழு தானியங்கள்

வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் போன்றவை எடை மேலாண்மை, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளுக்கு உதவுகிறது. பழுப்பு அரிசி, காட்டு அரிசி, முழு கோதுமை ரொட்டி, குயினோவா போன்றவை அடங்கும்

சிலுவை காய்கறிகள்

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்த உணவாக சிலுவை காய்கறிகள் உள்ளது. இவை வீக்கத்தைத் தடுப்பது, செல் சேதத்தைத் தடுப்பது, மற்றும் தீங்கு விளைவிக்கும் புற்றுநோய் செல்களை அழிப்பது போன்றவற்றிற்கு உதவுகிறது

பீன்ஸ் வகைகள்

பீன்ஸ் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளது. மேலும் பீன்ஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வீக்கத்தைத் தடுக்க மற்றும் சேதமடைந்த செல்களைச் சரி செய்ய உதவுகிறது. இது புற்றுநோய் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது

மசாலா, மூலிகைகள்

இதில் அதிகளவிலான ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. குறிப்பாக மஞ்சள், இஞ்சி, கருமிளகு போன்ற மசாலா வகைகள் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி, கால்சியம், ஃபோலேட், பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதன் அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் மார்பக புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது