ஆண்களில் பெருங்குடல் புற்றுநோய் இருப்பதற்கு சில அறிகுறிகள் தென்படலாம். இதில் ஆண்களில் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளைக் காணலாம்
குடல் பழக்கத்தில் மாற்றங்கள்
வயிற்று வலி, அடிக்கடி மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் குடலில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது சில நாள்களுக்குள் குறைந்து விடலாம். ஆனால், ஒரு சில நாட்களுக்கு மேல் நீடித்தால், அது அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலம்
வீக்கம் மற்றும் பிடிப்புகள்
எப்போதாவது பிடிப்புகள் அல்லது வீக்கம் என்பது வயிறு, வாயு அல்லது சில உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பொதுவான செரிமான பிரச்சனைகளைக் குறிக்கிறது. இந்த விவரிக்க முடியாத பிடிப்புகள் மற்றும் வீக்கம் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்
குடல் காலியாக இல்லாத உணர்வு
ஒருவருக்கு குடல் காலியாக இல்லை என்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் அது பெருங்குடலில் அடைப்பாக மாறி, பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தலாம்
எடையிழப்பு
திடீரென மற்றும் எதிர்பாராத விதமாக உடல் எடை குறைவது பல வகையான புற்றுநோய்களின் அறிகுறியாகும். அதன் படி, 6 மாதங்களுக்குள் அதிகளவு இழப்பது பெருங்குடல் புற்றுநோயைக் குறிக்கிறது
சோர்வு
பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிலையான சோர்வு அல்லது பலவீனத்தை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது சோர்வாக இருப்பது இயல்பானது எனினும், நாள்பட்ட சோர்வு பிரச்சனையை ஏற்படுத்தலாம்